
பாதிக்கப்பட்ட அனைவரும் சுமார் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர் ம.மலரவன் குறிப்பிட்டார்.
அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே காணப்படுகின்ற போதிலும், அவை நடைமுறையில் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை என கண், காது, மூக்கு சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் இந்திரநாத் சுட்டிக்காட்டினார்.
ஒலி தொடர்பான கட்டுப்பாடுகளும் நடைமுறையில் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளின் கீழ் பொதுத் தொல்லை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸாருடன் விரைவான கலந்துரையாடலை நடத்துவதற்கும் அமைச்சர் மற்றும் ஆளுநர் இணக்கம் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் எந்தவொரு திருவிழா அல்லது பொது நிகழ்விலும் பாதுகாப்பை விடக் கொண்டாட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படக் கூடாது என்றும், மக்களின் உயிர் மற்றும் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாடும் உரிய பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
