நாடு கடத்தப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள்!!

நாடு கடத்தப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள்!!

 இலங்கையில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்து இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோதர நிபுண என்பவரின் சகோதரர் மற்றும் புளூமெண்டல் சங்கா ஆகிய இரு குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள், அபுதாயில் இருந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு நபர்களும் அபுதாபியில் பதுக்கியிருந்த போது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு இழுத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தற்போது மேலதிக விசாரணைகளுக்காக நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *