மெட்றோ பேருந்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைப்பு!!

மெட்றோ பேருந்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைப்பு!!

 இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கீழ் புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது கூடுதல் சுமையைச் சுமத்தும் என்று கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

‘மெட்ரோ’ பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகக் கூறிய சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன, அவற்றை இறக்குமதி செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது குறித்த அரசாங்கத்தின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், புதிய பேருந்துகள் தற்போது தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளை ஈர்க்காது என்று வாதிட்டதுடன், இத்திட்டம் பொதுமக்களுக்குத் தவறான விதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மெட்ரோ’ பேருந்துகள் வழக்கமான பேருந்துகளை விட அதிக டீசலை நுகர்கின்றன என்று கூறிய அவர், இத்திட்டத்தினால் ஏற்படும் இழப்புகளை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.

மேலும், தேவையற்ற ஒரு முயற்சி என வர்ணித்த அவர் இத்திட்டத்திற்காக அரசாங்கம் பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

அத்துடன், மெட்ரோ பேருந்து சேவையின் செயல்பாடு மற்றும் நிதிசார் சாத்தியக்கூறுகள் குறித்து அதிக வெளிப்படைத்தன்மை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.  

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *