பிரக்ஞானந்தாவுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

பிரக்ஞானந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

 தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய், நோர்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியுள்ள தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


நோர்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.

நோர்வேசெஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தலைமை செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன் பிரக்ஞானந்தாவுடன்   விஜய் செஸ் விளையாடினார்.

செஸ் போர்டு எடுத்து வரச்சொல்லி என்னுடன் முதலமைச்சர் விளையாடினார். முதலமைச்சர் செஸ் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த பிரக்ஞானந்தா, முதலமைச்சர் விஜய் 50 லட்சம் ரூபா வெகுமதி வழங்கியதாகவும் கூறினார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *