புலிகளின் தங்கம் கொண்டு வந்த விமானி படுகொலை!!

புலிகளின் தங்கம் கொண்டு வந்த விமானி படுகொலை!!

 இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும் தொகை தங்கங்களை வடக்கில் இருந்து விமானம் மூலமே அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தங்கங்களை கொண்டு வந்த விமானி சுட்டுக் கொல்லப்பட்டு மேலும் விமானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தொடர்பில் இன்று வரை எவ்வித தகவலும் இல்லை என திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இறுதி போரின் போது வடக்கில் கைப்பற்றப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்த போது தங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த தகவல் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்படுகிறது.

ஆனால், அன்றைய இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தெரியாது.அதன் பின்னர் கோட்டாபயவிடமிருந்து உத்தரவு வருகிறது, ‘ஜெனரலுக்குச் சொல்ல வேண்டாம்’ என்று அதை மூடிமறைக்கிறார்கள்.

இவர்கள் இவற்றை ஹெலிகொப்டர்கள் மூலமே கொண்டு வருகிறார்கள். ஒரே விமானி மூலமாகத்தான் கொண்டு வருகிறார்கள்.இதன் இறுதி கொள்கலன்களை கொண்டு வரும்போது அங்கிருந்த துப்பாக்கிதாரிகள் இன்று வரை காணாமல் போயுள்ளனர்.விமானி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்துவிட்டார்.

அதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை.ராஜபக்ச கூட்டத்தினர் இவ்வாறே தங்களின் குற்றங்களை மூடி மறைத்து வைத்துள்ளனர்.ஆனால் இது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தங்கம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் (11ஆம் திகதி) வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுக் கொண்டுள்ளது.

மேலும் இந்தத் தங்க ஆபரணங்கள் இதுவரைக் காலம் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குச் சொந்தமான விசேட பாதுகாப்புப் பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *