விஜய் பதவியேற்பில் முளைத்த சர்ச்சை!!

விஜய் பதவியேற்பில் முளைத்த சர்ச்சை!!

 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

இவ்விழாவில் பதவியேற்புக்கு முன்பாக தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதாவது முதலில் மத்திய அரசின்படி உத்தரவின்படி வந்தே மாதரமும், இரண்டாவது தேசியக்கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்திலும், தேசிய கீதம் நிகழ்வின் இறுதியிலும் பாடப்படுவது மரபாக உள்ளது. ஆனால், இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், அது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *