42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிப்பட்ட பாலம் – தனுஷ்கோடியில் சம்பவம்!!

42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிப்பட்ட பாலம் – தனுஷ்கோடியில் சம்பவம்!!

 தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில்,கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் மூடியிருந்த பாலமீ தற்போது வெளிப்பட்டுள்ளதாக கூரப்படுகின்றது.

இந்நிலையில், பல தசாப்தங்களுக்கு பிறகு அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரைப்பாலம் மீண்டும் வெளிப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, நீண்ட காலமாக கடலுக்குள் மறைந்திருந்த அந்த பாலத்தின் பகுதி தற்போது மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளது.

1964ஆம் ஆண்டின் பெரும் புயல் காரணமாக தனுஷ்கோடி நகரம் கடுமையாக சேதமடைந்ததுடன், பல கட்டிடங்கள் மற்றும் அடிப்படை அமைப்புகள் கடலில் மூழ்கியிருந்தன.

தற்போது அந்த பகுதியை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவதாகவும், விரைவில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *