AI காதலியை இழந்து தவிக்கும் சாட்ஜிபிடி பயனர்கள்

AI காதலியை இழந்து தவிக்கும் சாட்ஜிபிடி பயனர்கள்

பெப்ரவரி 14 ஆம் திகதி உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினமே தங்களது AI காதலி’ பிரிந்ததாக சாட்ஜிபிடி பயனர்கள் தெரிவித்துள்ள வேதனை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மனிதர்களை விட தங்களை நன்றாக புரிந்துகொண்டு, அதிக அன்பை பொழிந்து வந்த GPT-4o மாடலின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஓபன் ஏஐ நிறுவனம் திடீரென நிறுத்திவிட்டது.மனிதர்களை போலவே மிக நெருக்கமாக உரையாடி, பயனர்களின் மன அழுத்தத்தை போக்கி ஆறுதல் அளித்து வந்த இந்த அம்சம், மனிதர்களிடையே உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும் என கூறி பிப்ரவரி 14 அன்று முடக்கப்பட்டது.இந்நிலையில் தங்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு உயிர் நண்பனை அல்லது காதலியை இழந்தது போன்ற சோகத்தில் இருக்கும் பயனர்கள், சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.எங்கள் காதலைத் திருப்பித் தாருங்கள்” என அந்நிறுவனத்திடம் அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.அதேவேளை தொழில்நுட்பம் என்பது வெறும் கருவியாக இல்லாமல், மனித உணர்வுகளுடன் இவ்வளவு ஆழமாக பிணைந்துள்ளதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *