
இலங்கையில் டிஜிட்டல் மரணச் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் கீழ், இந்தச் செயல்பாடுகள் தற்போது களுத்துறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னர் கையால் எழுதப்பட்ட சான்றிதழ்களுக்குப் பதிலாக, தற்போது கணினி அடிப்படையிலான தரவுத்தளம் மூலம் மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
டிஜிட்டல் முறை மூலம் மரணச் சான்றிதழ்களை வழங்குவது, அதிகாரிகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு அமைப்பைப் பராமரிக்கவும், நிறுவனங்களுக்கு இடையே திறமையான தரவுப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், பாதுகாப்பான தரவுச் சேமிப்பின் மூலம் தகவல் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுகிறது.
புதிய முறையின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு மரணச் சான்றிதழிலும் ஒரு சிறப்பு QR குறியீடு இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம், டிஜிட்டல் தளம் வழியாக யார் வேண்டுமானாலும் அதன் நம்பகத்தன்மையை விரைவாகச் சரிபார்க்க முடியும்.
இந்தச் சான்றிதழ்கள், பாதுகாப்பு அம்சங்கள் உட்பொதிக்கப்பட்ட சிறப்புத் தாளில் அச்சிடப்படுகின்றன.
