
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சனிக்கிழமை சிரியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.
2011ஆம் ஆண்டு சிரியாவில் போர் தொடங்கிய பிறகு, பதவியில் இருக்கும் ஐ.நா. தலைவர் ஒருவர் அந்நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில்,
பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் கீழ், உலக நாடுகளுடனான உறவைச் சிரியா மீண்டும் புதுப்பித்து வரும் சூழலில் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னாள் தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், 2025 நவம்பர் வரை ஐ.நா.வின் தடைப்பட்டியலில் இருந்தவருமான தற்போதைய சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாராவை குட்டேரஸ் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
அத்துடன், சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர் அசாத் அல்-ஷைபானி, பிற அரசு அதிகாரிகள் மற்றும் சிரிய சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.