
ஈரான் கடற்படையின் தெற்கு கடற்படையில் உள்ள ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) எனப்படும் ஈரான் கப்பல் ஒன்று இலங்கைத்தீவின் காலி கடலில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் தரித்து நின்று உதவி கோரியுள்ளது.
இதனால், இலங்கை கடற்படையும், இலங்கை விமானப்படையும் இணைந்து மீட்டுள்ளனர். கப்பலில் இருந்து 180 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பணியாளர்களில் 30 பேர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அமனுதிக்கப்பட்டுள்ளனர்.
கப்பலின் முத்த அதிகாரி ஒருவர் அவசர அழைப்பை ஏற்படுத்தி உதவி கோரியதால், கப்பலில் இருந்து பணியாளர்களை பாதுகாப்பாக மீட்டதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.
இது மனிதாபிமானப் பணி எனவும், இலங்கைக் கடற் பரப்புக்குள் நின்று கொண்டு உதவி கோரியதால் கப்பலில் இருந்து அதன் பணியாளர்களை மீட்டதாக கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள ஈரான் தூதுவரும் தூதரக அதிகாரிகளும் இலங்கை வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு தூதரக அதிகாரிகள் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு (International Convention on Maritime Search and Rescue -1979 ஆம் ஆண்டு) ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
