
புலம்பெயர் வாழ் கவிஞர் து. திலக் உருவாக்கிய 25 ஆளுமைகளின் ஆற்றல்களை உள்ளடக்கிய வைரக்குடுவை எனும் ஆவண த் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சி கே. கே மண்டபத்தில் இன்று (09.11.2025) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. முரளிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கலைஞர்கள் படைப்பாளர்கள். பல் துறை ஆளுமையாளர்கள் என அரங்கம் நிறைந்த அவையாக இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது.
உரும்பையூர் திலக் அவர்களின் மகத்தான இந்தப் பணி குறித்து விருந்தினர்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
ஒரு படைப்பாளனாக சக படைப்பாளர்களை வாழ்த்தி மகிழ்கிற அவருடைய பணிக்கு நாமும் வாழ்த்து தெரிவிக்கிறோம்.
இந்நூலை “தமிழர்களரி ஆவணக்காப்பகம் வெளியீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















