அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!!

 இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை நேரடியாகப் பாதிக்கும் என அச் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம், தெரிவித்தார்.

இறக்குமதி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனி, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரும் காலத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நிலவும் சந்தை நிலவரங்கள் மற்றும் அந்நிய செலாவணி விகித ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளனர்.

அதன்படி, 400 கிராம் பால்மா பாக்கெட்டின் விலை 50 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்ர்உ நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையிலும் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *