எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

   அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், லங்கா மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டு 285 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, லங்கா பெற்றோல் 95 ஒக்டேனின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாவாகவும், லங்கா பெற்றோல் 92 ஒக்டேனின் விலை 24 ரூபாவால் உயர்த்தப்பட்டு 434 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *