ரம்ப் வெளிப்படுத்திய ரகசியம் – அதிர்ச்சியில் உலகம்!!

ரம்ப் வெளிப்படுத்திய ரகசியம் – அதிர்ச்சியில் உலகம்!!

 ஒவ்வொரு இரவும் லட்சக்கணக்கான பீப்பாய் எண்ணையை 200 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு தெரியாமல் எடுத்து வந்தோம் எனவும் ஈரானிடம் ரேடார் இல்லாததால் அவர்களால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளமை உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. அந்த போர் தற்போது வரை நின்றபாடில்லை.

இடையில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் ஏற்பட்டது. அதேநேரம் கடந்து சில நாட்களாக ஹார்மூஸ் நீரிணை உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கு இடையே மோதல் எழுந்தது.

இதையடுத்து, அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் மூளுமோ என்கிர அச்சம் உலக நாடுகளிடம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் செல்லும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் காரணமாகவே கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்திருக்கிறது.. இந்நிலையில், செய்தியாளிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,

‘கடந்த மாதம் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வணிக கப்பல்களுக்கு ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பு அளிக்கும் ரகசிய பணியை செய்யுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டேன்.

இதனால் ஒவ்வொரு இரவும் லட்சக்கணக்கான பீப்பாய் எண்ணையை 200 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு தெரியாமல் எடுத்து வந்தோம். ஈரானிடம் ரேடார் இல்லாததால் அவர்களால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று கூறியிருக்கிறார். 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *