கைது நடவடிக்கை இடம்பெறுமா – அச்சத்தில் கோட்டபாய!!

கைது நடவடிக்கை இடம்பெறுமா – அச்சத்தில் கோட்டபாய!!

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவை கைது செய்ய சமகால அநுர அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.இதற்கு வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கைதுகள் தொடர்பில் அடுத்தடுத்த கட்டங்கள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கோட்டாபய மிகவும் அச்ச நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடை உத்தரவின் காரணமாக இந்த அச்ச நிலையை உறுதியாகி உள்ளதாக ராஜபக்சர்கள் நம்புகின்றனர்.

இந்த சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து, கோட்டபாயவை கைது செய்வதையும் தடுப்புக்காவலில் வைப்பதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியுள்ளனர்.

இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பறிபோயுள்ளதாகவும், இதன் காரணமாகவே தாம் கைது செய்யப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *