கெகல்பத்ர பத்மேயின் அலைபேசியில் சிக்கிய நடிகைகளின் விபரங்கள்!!

கெகல்பத்ர பத்மேயின் அலைபேசியில் சிக்கிய நடிகைகளின் விபரங்கள்!!

போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளிலிருந்து, ஏழு நடிகைகள், மாடல்கள் மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்தபோது, ​​ஒன்பது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கிடைத்துள்ளதாகவும், மேலும் ஏழு நடிகைகள், மாடல்கள் தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளதாகவும் CID கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு கைபேசிகள் மீட்கப்பட்டன.

அந்த சாதனங்களில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், புலனாய்வாளர்களால் அவற்றை மீட்க முடிந்தது. மீட்கப்பட்டவைகளில் 8841 தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், 326000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5039 காணொளிகள் ஆகியவை அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்களையும் புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இத்தகவல்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த கருவிகளில் 13 சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான தொலைபேசி எண்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் நபர்களுக்குச் சொந்தமான 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புலனாய்வாளர்கள் 17 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தது.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, கெஹெல்பத்தர பத்மே 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேறியதிலிருந்து சுமார் 15 முறை 13 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் ஆகியவை அந்த நாடுகளில் அடங்கும். கெஹல்பத்ர பத்மே இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, சர்வதேச நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *