
நுவரெலியாவில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 18 நாட்களின் பின்னர்அவருக்குச் சொந்தமான உடமைகள் கிடைத்துள்ளன.
ஹங்குரான்கெத்த பகுதியில் மண்சரிவினால் முழுமையாக அழிவடைந்த வீட்டினை சுத்தம் செய்யும் பணி இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட வேளையில், சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் பணம் என்பன உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கமைய 5 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் மூன்று இலட்சம் ரூபா பணம் என்பன பிரதேச செயலக அதிகாரிகள், மக்கள் முன்னிலையில் இராணுவத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன.
