டென்மார்க்கில் நடமாடும் இலங்கை தூதரகம்!!

டென்மார்க்கில் நடமாடும் இலங்கை தூதரகம்!!

 ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் வாழும் இலங்கையர்களின் தேவைகளுக்காக நடமாடும் தூதரக சேவை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

சுவீடனின் ஸ்டொக்ஹோமில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தினால், டென்மார்க்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான தூதரக சேவைகளை இலகுவாக வழங்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடமாடும் தூதரக சேவை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

டென்மார்க்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த தமிழர்கள் உட்பட இலங்கையர்களுக்கு பிரதான தூதரக சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிறப்புப் பதிவு, கடவுச்சீட்டுகளை புதுப்பித்தல், இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களை உறுதிப்படுத்தல் ஆகியவை அவற்றுள் முக்கியமானதாகும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *