அனோஜனின் விடுதலைக்காக மெழுகுவர்த்தி போராட்டம்!!

அனோஜனின் விடுதலைக்காக மெழுகுவர்த்தி போராட்டம்!!

 சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த போராட்டமானது, நேற்று(20.09.2026) திருகோணமலை – கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுன் சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கவனயீர்ப்பில் சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவரின் விடுதலைக்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இளைஞர்கள் பங்கேற்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *