இலங்கை -விளையாட்டு துறையினர் மீது சுசந்திகா குற்றச்சாட்டு முன்வைப்பு!!

இலங்கை -விளையாட்டு துறையினர் மீது சுசந்திகா குற்றச்சாட்டு முன்வைப்பு!!

விளையாட்டுத்துறை அமைச்சில் இருப்பவர்கள் அனைவரும் கள்வர்கள் என முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தனது ஐம்பதாவது அகவையை கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வருபவர்கள் அனைவரும் வர்த்தகம் செய்பவர்கள்.இவர்கள் விளையாட்டுத்துறைக்கோ அல்லது வீரர்களுக்கோ சிறந்த சேவை வழங்கும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல.

விளையாட்டுத்துறை அமைச்சில் உள்ள சிற்றூழியர்கள் கூட வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இலங்கையின் விளையாட்டுத்துறை பற்றி கதைக்க எனக்கு விருப்பவில்லை.மேலும் வீரர்களும் தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கும் அவர்களின் தனிப்பட்ட இலாபத்திற்குமே செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *