
டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சி அதிகாரங்கொண்ட கிரீன்லாந்து தீவை வாங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருவதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. “கிரீன்லாந்தை வாங்குவது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆலோசித்து வருகிறார். ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு இது அமெரிக்காவிற்கு மிக அவசியமானது,” என்று வெள்ளை மாளிகை ஊடக பேச்சாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
