
சுவிற்சர்லாந்து மரத்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயம் ஊடாக சுவிற்சர்லாந்து வாழ் தமிழுறவு திரு.பத்மநாதன் விக்னேஸ்வரன் அவர்களின் 387,000/=மொத்த நிதிப் பங்களிப்பில்
“ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக “கல்வியே எங்கள் மூலதனம்” எனும் தொனிப்பொருளுடன் முதற்கட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தாயகத்தில் கிளி/கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்றையதினம், 106,850 ரூபா பெறுமதியான நிதியில் தேவையுடைய 73 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பௌதிக வளங்கள் குறைந்த நிலையில் காணப்படும் கிளி/கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற இப் பணியானது மிக நெருக்கடி நிலையில் வாழும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆறுதலாக உதவியாக அமைந்துள்ளது.
நிதி வழங்கியவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர்
தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். கிராம அமைப்பினர் மற்றும் நலன்விரும்பிகளும் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
