
யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் மட்டக்களப்பு, பெரியபோரதீவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மீட்கப்பட்ட சடலம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன் தயான், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு உறவினரின் வருகைக்காக மேல் விசாரணையை ஒத்திவைத்தார்.
