
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னதாக குறித்த இளைஞன் நேற்றிரவு முதல் காணாமல் போனதாக, இளைஞனின் பெற்றோர் இன்று காலை காவல்நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர். குறித்த முறைபாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்
