
வரலாற்றுச் சிறப்புமிக்க Kangaroo Route ஊடாகப் பயணிக்கும் Qantas Airlines வானூர்தி நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைந்தது.142 பயணிகளுடன் வருகை தந்த இந்த விசேட வானூர்தியின் பயணிகளை, வானூர்தி நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். வானூர்தி நிலையத்திலிருந்து இறங்கியது முதல் வெளியேறும் வரை பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி துரிதமான சேவைகளை வழங்குவதற்கு வானூர்தி நிலையத்தின் Silk Route வருகை வசதி பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வானூர்தி நிலையத்தின் பிரத்யேக விரைவுச் சேவையான இந்த ‘சில்க் ரூட்’ வசதியானது, பயணிகளின் குடிவரவு மற்றும் ஏனைய நடைமுறைகளை விரைவாகவும், தனிப்பட்ட உதவியுடனும் பூர்த்தி செய்து கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறான உயர்தர வசதிகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பயணிகள், வானூர்தி நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக முன்கூட்டியே ‘சில்க் ரூட்’ விரைவுச் சேவை வசதியை முன்பதிவு செய்யுமாறு இலங்கை வானூர்தி நிலையங்கள் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
