
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்த தொடரில் குழு ஏ பிரிவில் அமெரிக்க அணி பங்கேற்று விளையாடி வருகிறது.தகுதிகாண் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட அமெரிக்க அணி, சிறப்பாக விளையாடிய போதிலும் தோல்வியடைந்தது.போராடி தோல்வியைச் சந்தித்த அமெரிக்க அணி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.இந்த நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதனிடையே, பாகிஸ்தான் அணியை நாளை இரவு நடைபெறவுள்ள போட்டியில் அமெரிக்கா எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
