அதிக போதைப் பாவனை – இளைஞன் மரணம்!!

அதிக போதைப் பாவனை – இளைஞன் மரணம்!!

 போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்(27.7.2026) காலை மலசலகூடம் சென்று அங்கே மயக்கமுற்றுள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அதிகளவான போதைவஸ்து பாவனை காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *