கட்டாய அமுலில் QR முறைமை!!

கட்டாய அமுலில் QR முறைமை!!

 எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை எதிர்காலத்தில் மேலும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் சந்திப்பில் கலச்துகொண்டு உரையாற்றிய அவர், உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணய வெளியேற்றம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொருளாதாரத்தில் அழுத்தம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தி, டொலர் செலவினத்தை குறைக்கும் வகையில் QR மற்றும் கோட்டா முறைமைகள் மேலும் கடுமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *