கோயில் திருவிழாவால் ஏற்பட்ட சோகம் – 400 பேருக்கு கண் பாதிப்பு!!

கோயில் திருவிழாவால் ஏற்பட்ட சோகம் – 400 பேருக்கு கண் பாதிப்பு!!

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு – பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்று மற்றும் வாணவேடிக்கை காரணமாக கண் பாதிப்படைந்த 400 இற்கும் மேற்பட்டோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டத்தரிப்பு – பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் நேற்று (20) இரவு உற்சவத்தின் போது அதிக வாணவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு, இசை நிகழ்வின் போது அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே பொதுமக்கள் பலரது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு, இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏனைய வைத்தியசாலைகளில் இருந்தும் வைத்தியர்களும் தாதியர்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *