தொலைத்தொடர்பு அமைச்சின் புதிய நடைமுறை!!

தொலைத்தொடர்பு அமைச்சின் புதிய நடைமுறை!!

 இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சிம் அட்டை விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது

புதிய சிம் அட்டை பெறும்போது விண்ணப்பதாரரின் நேரலை (Live) புகைப்படம் எடுத்து பதிவு செய்யும் நடைமுறை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இதன்படி, போலி அடையாளங்களைப் பயன்படுத்தி குற்றங்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

ஒரு தேசிய அடையாள அட்டையைக் கொண்டு ஒரு தொலைபேசி நிறுவனத்தில் 5 சிம்கள் வரை (மொத்தம் 3 நிறுவனங்களில் 15 சிம்கள் வரை) பெற முடியும்.

அத்துடன் தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வேறு சேவைக்கு மாறும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2027-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து சிம் பயனாளர்களின் அடையாளத்தையும் 100% உறுதிப்படுத்த TRCSL திட்டமிட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *