பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது சட்ட நடவடிக்கையா!!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது சட்ட நடவடிக்கையா!!

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த உத்தரவு, பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்திருந்தது.

செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியிருந்தார்.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பான அரசியல் ஒப்பீட்டை முன்வைத்த அவர், தன்னை விடுதலைப் புலிகைளை சார்ந்தவர் எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *