போதைப்பொருள் விற்பனை – வீடொன்று சுற்றிவளைப்பு!

போதைப்பொருள் விற்பனை – வீடொன்று சுற்றிவளைப்பு!

 போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, ​​அவரது மனைவி கத்தியால் வெட்டி கொன்றுவிடுவதாக மிரட்டி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியினர், அநுராதபுரத்தில் உள்ள ஜெயந்தி பட்டுமாக பகுதியில் வசித்து வந்தவர்கள் ஆவர்.

அநுராதபுர தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலின்படி, ஒரு பெண் பொலிஸ் அதிகாரியுடன் பல அதிகாரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

சோதனைக்காக பொலிஸார் வீட்டை நெருங்கிய உடனேயே, சந்தேகநபர்களில் ஒருவர் வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, ​​அவரது மனைவி கத்தியால் வெட்டி கொன்றுவிடுவதாக மிரட்டி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 3200 மில்லிகிராம் ஹெரோயினுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *