
ருமேனியாவில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் வழியாக “ருமேனிய தொழிற்சாலைகளில் பாரிய வேலைவாய்ப்புகள்” என விளம்பரம் செய்து, தொழிற்சாலைக் களஞ்சியம், ஹோட்டல், துப்புரவுத்தொழில், கட்டிடத்தொழில் மற்றும் வெதுப்பகத் தொழில்களில் வேலை பெற்றுத் தருவதாக இளைஞர்களிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தலா 16 இலட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டதுடன், 3 முதல் 4 மாதங்களுக்குள் ருமேனியாவிற்கு அனுப்பி வைப்பதாக முகவர் நிலைய உரிமையாளர் வாக்குறுதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது
