
மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின்
‘பத்திரிகைத்துறையில் என்கதை’ எனும் நூல் அறிமுக நிகழ்வு கரவை மாணிக்கவாசகர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 31/05/2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில் மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு உரையினை வடமராட்சி இந்துக் கல்லூரி உப அதிபர், ந. பிரதீபன் நிகழத்தியதை தொடர்ந்து
தலைமை உரையை நிகழ்விற்கு தலைமை தாங்கிய யாழ்ப்பாணம் பிரந்தியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் நிகழ்த்தியதை தொடர்ந்து
வாழ்த்துரைகளை முன்னாள் ஹார்டலிக் கல்லூரி அதிபர் திரு. தெய்வேந்திரராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்
கு.மிகுந்தன், பருத்தித்துறை சமூர்த்தி வங்கி மேலாளர் ச. ராகவன், ஆகியோர்
நிகழ்த்தினர்.
தொடர்ந்து நூல் அறிமுக நிகழ்வினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்
வேல் நந்தகுமார் நிகழ்த்தியதை தொடர்ந்து நூலினை நூலாசிரியர் தனபாலசிங்கம் வழங்கிவைக்க பிரதிகளை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. ரஞ்சன், மற்றும் சிதம்பரப்பிள்ளை புத்தக சாலை உரிமையாளர் ஆகியோர் பெற்றுக் கொண்டதை தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை
உள வைத்திய நிபுணர் சி.சிவதாஸ் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து கருத்துரைகளை ஓய்வு பெற்ற அதிபர்
இ. இராகவன் நிகழ்த்தியத்தை தொடர்ந்து ஏற்புரையினை பொத்தக ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் நிகழ்த்தினார்.
இதில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள், வீரகத்தி தானபாலசிங்கத்தின் நண்பர்கள், ஊடகவியலாளகள், என பலரும் கலந்துகொண்டனர்.