
இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது.பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட சுமார் 900 மருந்துகள் இந்த உயர்வில் அடங்கும்.தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு சுமார் 0.65% மட்டுமே இருக்கும்.மொத்த விலைக் குறியீட்டின் (WPI) உயர்வை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் உள்ள மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை, அரசு அனுமதி இல்லாமல் உற்பத்தியாளர்கள் உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு காரணம் மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் செலவு அதிகரிப்பதே ஆகும்.மத்திய கிழக்கில் நடைபெறும் ஈரான்–இஸ்ரேல் தொடர்பான பதற்றத்துடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் விலை உயர்வு மிகவும் குறைவாக உள்ளது.
