கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡

கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡

 கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 3கோடி ருபா பணத்தை மோசடி செய்த மூவர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவிலுள்ள நிறுவனம் ஒன்றுடன் தொடர்புள்ளதாக கூறி, குறித்த பணத்தொகையை மோசடி செய்ததாக 9 முறைப்பாடுகள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள.

இந்த மோசடி தொடர்பில் கடந்த மார்ச் மாதம் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்புச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *