
தருமபுரம் கிராமத்தில் தடயம் அறக்கட்டளை வளாகத்தில் 13.04.2026 அன்று தடயம் கலை இலக்கிய கழகத்தின் ஒரு முக்கிய செயற்பாடாக அமரர் கந்தையா பொன்னம்மா அவர்களின் நினைவாக
” பொன்னம்மா படிப்பகம்” திறந்து வைக்கப்பட்டது.
அமரர் பொன்னம்மா அவர்களின் 31ம் நாள் திதி அன்று இந்த வாசிப்பு குடில் திறந்து வைக்கப்பட்டது.

மாணவர்களிடையே வாசிப்பு செயற்பாடுகள் அருகிப் போயுள்ள நிலையில், இவ்வாறான வாசிப்பை மேம்படுத்தும் திட்டங்கள் மிகவும் தேவையான சமூகப்பணியாகும் என பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான வாசிப்பு குடில்கள் படைப்பாளர்களுக்கும் மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

