சோரன்பற்று – சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!

சோரன்பற்று – சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன்பற்று  சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சரஸ்வதி சன சமூக நிலைய தலைவர் கைலாயபிள்ளை சிந்துயன் தலைமையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக ஆலய வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து முதல் கல் எடுத்துவரப்பட்டு மைதானத்தில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு அடிக்கல்கள் நாட்டப்பட்டன.

முதல் கல்லினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நாட்டிவைக்க சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  பச்சிலை பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்,  கிளி சோரன் பற்று கணேச வித்தியாலய  அதிபர் சோமசுந்தரம் சிவதாசன், சோரன் பற்று கிராம அலுவலர், அருள்பிரகாஸ் சுபாசினிஉட்பட பலரும் நாட்டிவைத்ததை தொடர்ந்து பலரும் நாட்டிவத்தனர்.

தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

கருத்துரைகளை நிகழ்வின் பிரதம, சிறப்பு  கௌரவ விருந்தினர்கள் நிகழ்த்தினர்.

இதில் பச்சிலை பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *