
பிபில பகுதியில் உள்ள பெண் ஒருவரை மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அம்பாறை இளைஞனின் அலைபேசியில் இருந்து 700க்கு மேற்பட்ட பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பல பெண்களின் தனிப்பட்ட, ஆபாசமாக மாற்றப்பட்ட புகைப்படங்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளன.
டெலிகிராம் (Telegram) மூலம் இளம் பெண்களை வேட்டையாடி வந்த 24 வயது ‘சைபர் கிரிமினல்’ ஒருவனை CID (Criminal Investigation Department) அதிரடியாகக் கைது செய்துள்ளது.
தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக உண்மையான பெயர், புகைப்படம் எதையும் பயன்படுத்தாமல், உள்வரும் அழைப்புகளையும் இல்லாதவாறு (Incoming Calls) மாற்றி அமைத்துள்ளார் குறித்த .இளைஞன்.
பெண்கள் மிக அவதானமாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
