
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,
இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.