விரிவுரையாளர் த.அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு!!

விரிவுரையாளர் த.அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு!!

விரிவுரையாளர் அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா,  இன்றைய தினம் பிற்பகல் 3:30 மணியளவில்  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விரிவுரையாளரும்,  எழுத்தாளருமான புலோலியூர்  வேல்.நந்தகுமார் தலைமையில் இரண்டு நிமிட அக வணக்கத்துடன் மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு  ஆரம்பமாகியது.

 முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து, வரவேற்புரையினை ஆத்மிகா அஜந்தகுமார் நிகழ்த்தினார்.  தலைமை உரையினை நிகழ்வின் தலைவரும் விரிவுரையாளருமான புலோலியூர் வேல்.நந்தகுமார் நிகழ்த்தியதை தொடர்ந்து   வெளியீட்டுரையினை ஜீவநதி வெளியீட்டக  பதிப்பாசிரியர் கலாமணி பரணீதரன் நிகழ்த்தினார். 

தொடர்ந்து  நூலாசிரியர் அஜந்தகுமார்  3 நூல்களையும் வெளியீட்டு வைக்க முதற் பிரதியினை எழுத்தாளர் அமரர் குப்புளான் சண்முகம் அவர்களுடைய துணைவியார் திருமதி புனிதவதி சண்முகலிங்கம் பெற்றுக்கொண்டார். 

சிறப்பு பிரதியினை சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை உரிமையாளர் பெற்றுக்கொண்டதனை தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

பழைய கண்ணாடியில் புதிய விம்பங்கள், 

அழலுறு நிலத்தின் தணற் சொற்கள்,

 பூனை வெளிச்சம் ஆகிய மூன்று புத்தகங்களுமே வெளியீடு செய்யப்பட்டன.

நூல்களுக்கான மதிப்பீட்டு உரைகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையை சேர்ந்த கலாநிதி தி.செல்வமனோகரன், ஆசிரியர் சி.ரமேஷ், 

ந.குகபரன் ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையினை பொத்தக எழுத்தாளர் விரிவுரையாளர் த. அஜந்தகுமார் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. குபேந்திரன், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், விருவுரையாளர் அஜந்தகுமாரின் உறவுகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன்  நூல்களையும் பெற்றுக் கொண்டனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *