
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு விலகிச் செல்லக்கூடும் என்றும், பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடும் காற்றும் மழையும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
