கனடாவில் தமிழ் வம்சாவளி இளைஞன் கைது!!

கனடாவில் தமிழ் வம்சாவளி இளைஞன் கைது!!

 கனடாவில் 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுடன் இணையவழி தகாத தொடர்புகளை பேணியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, மனு சுகுணகுமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், Snapchat மற்றும் Reddit உள்ளிட்ட சமூக ஊடக செயலிகள் ஊடாக சிறுமிகளைத் தொடர்புகொண்டு அவர்களுடன் தகாத உரையாடல்களில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சிறுமிகளிடம் அவர்களது அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கோரியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, சந்தேகநபரின் வசமிருந்த பல இலத்திரனியல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த நபரால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்கள் அல்லது அவரைப் பற்றிய மேலதிக தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கனேடிய பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் ஒரு பகுதியாக, சந்தேகநபரின் புகைப்படத்தையும் பொலிஸார் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *