உக்ரைன் தாக்குதலில் நடந்த துயரச் சம்பவம்!!

உக்ரைன் தாக்குதலில் நடந்த துயரச் சம்பவம்!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தீவிர தாக்குதலின் போது, ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று போலந்நேட்டோவின் வான்வெளியை மீறி அந்நாட்டு நிலப்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான போலந்தின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள லூப்லின் உள்ளிட்ட பகுதிகளில், அதிகாலையில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டன.

சைரன் ஒலிகள் ஒலிப்பதற்கு முன்பாக, குறைந்த உயரத்தில் விமானங்கள் பறப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் விவரித்துள்ளனர்.

உக்ரைன் எல்லையோரத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, போலந்து இராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது போர் விமானங்களை வான்வெளியில் பறக்கவிட்டதோடு, தரைவழி வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தயார் நிலையில் வைத்தது.​

போலந்து எல்லைக்குள் நுழைந்த ஏவுகணை ஒரு காலியான பகுதியில் விழுந்ததாகவும், இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நேட்டோ வான்வெளியை மீறி ரஷ்ய ஏவுகணை போலந்து எல்லைக்குள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *