
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு (06) மகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் 11 கைதிகள் காயமடைந்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் , இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும்,மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று காலை முதல் நீர்கொழும்பு – பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
