கிளிநொச்சி – முழங்காவில் வங்கி கிளையில் இருவர் கைது!!

கிளிநொச்சி – முழங்காவில் வங்கி கிளையில் இருவர் கைது!!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி  நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டு வந்திருந்த நிலையில் நேற்று (08)  கைதுஇருவரும் செய்யப்பட்டதாககூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமையவே இக்கூது இடம்புற்றதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 61 வயதுடையவர்கள் எனவும் 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *