வங்கியில் பணம் வைப்பில் இட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

வங்கியில் பணம் வைப்பில் இட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

 வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வங்கி கணக்குகளில் வைப்பில் உள்ள பண விபரங்களை அறிந்து பணம் மோசடியான முறையில் ஈட்டப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து, அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *