சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இன்று (06) அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே கங்கா ராம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், “அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்சமயம் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்” எனவும் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், “அவரது உடல்நிலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதுமில்லை. சிகிச்சைக்குப் பின் அவர் விரைவில் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *