இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக பதவியேற்பு!

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக பதவியேற்பு!

இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.இவர் நீண்டகாலமாக கணக்காய்வாளர் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்னவின் ஓய்வைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து, சுமார் 10 மாதங்களாக இந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது.இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜயரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை கடந்த 3 ஆம் திகதி ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *